Powered By Blogger

Tuesday 15 November 2011

இரண்டாம் கருவறை!!






அரைக்கால் சட்டையுடன்
புதியதை கண்டிடவே
மனதினுள் பயமிருந்தும்
காத்திருக்கும் வியப்புகளுக்காய்
விழிகளில் கனவுகளுடன்
உள்ளே பிரவேசித்தேன்!!

குடிசைப் பள்ளியில்
ஆரம்பம் கற்றுவிட்டு
மேல்நிலைக் கல்விக்காய்
கோபுரம் கண்டு
கண்கள் விரிய
ஆலயம் புகுவதுபோல்
உள்ளே பிரவேசித்தேன்!!




மருண்ட விழியுடன்
பிரமிப்பு அகலாது
வகுப்பறை தெரியாது
தவித்திருந்த எனை
தம் சுட்டுவிரல் கொடுத்து
அழைத்துச் சென்ற - அந்த
ஆளுயர ஆசானை
அண்ணாந்து பார்த்திருந்தேன் - அவர்
இன்னும் என் விழிகளில்!!

பாடநூல் படிப்பினை
கற்றுத்தந்த பாங்கினை
ஒற்றைச் சொல்லினால்
சொல்லிவிட முடியாது
கல்விப் பெருங்கடலினின்று 
சில முகவைகள் எனக்களித்த
பெருமைமிகு பேரவை!!




நுழைந்த நாள்முதல்
நூலொன்றை கொடுத்து
ஏறிவா மாணவனே! என
ஏற்றமிகு பண்புகளை
நாள்தோறும் சமைத்துத்தந்த
நாலந்தா ஓவியம்!!

சகமாணவர் முன்னும்
சரளமாய் பேசாத எனை
உலகம் இங்கே உனக்காக
ஓங்கிக் குரலெழுப்பு என
அக்கினிக் குஞ்சாய் எனை
அடைகாத்து பொறித்த
அடைக்கல ஆலயம்!! 





தேவையின் பொருட்டு
நாணல் போல வளையவும்
தேவையான இடத்தில்
செந்தேக்கு போல
உறுதியாய் நிற்கவும்
பாலபாடம் கற்பித்த
பல்கலைக் கழகம்!!

வெங்கொடிய  செந்நாகம்
விடமேறிய நாவைப்போல்
தீயவைகள் நெஞ்சில்
தலைதூக்க எத்தனிக்கையில்
தலையில் கொட்டி - அதை
முளையில் வேரறுத்த
முத்தமிழ் மன்றம்!!




எனக்குத் தெரியாமல்
மட்கி புதையுண்டு
என்னுள்ளிருந்த இயைபுகளை
இன்னதென இனம்கண்டு
இது உனக்குத் தகுமென
இனிதே உரைத்திட்ட
இன்னுமொரு தாய் நீ!!

தாயின் கருவறையில்
நான் இருந்ததோ
பத்து மாதங்களே!
ஏழு ஆண்டுகள் எனை
மீண்டும் கருவைத்து
நயமாய் நல்லுருவாக்கி
நன்மைபடச் செய்ததால்
நீ எனக்கு என்றும்
இரண்டாம் கருவறையே!!



அன்பன்
மகேந்திரன் 

70 comments:

ஷைலஜா said...

//நயமாய் நல்லுருவாக்கி
நன்மைபடச் செய்ததால்
நீ எனக்கு என்றும்
இரண்டாம் கருவறையே!!


///அருமை வாழ்த்துகள்.

shanmugavel said...

பொருத்தமான தலைப்பு .மிகவும் தேர்நதெடுத்த வரிகள்.நன்று.

M.R said...

ஆமாம் பள்ளியறை இரண்டாம் கருவறையே நண்பரே

M.R said...

இது உனக்குத் தகுமென
இனிதே உரைத்திட்ட
இன்னுமொரு தாய் நீ!!//

அழகிய வரிகள் அர்த்தம் நிறைந்தது

சக்தி கல்வி மையம் said...

தேவையின் பொருட்டு
நாணல் போல வளையவும்
தேவையான இடத்தில்
செந்தேக்கு போல
உறுதியாய் நிற்கவும்
பாலபாடம் கற்பித்த
பல்கலைக் கழகம்!!// உவமை அருமை..

M.R said...

தேவையின் பொருட்டு
நாணல் போல வளையவும்
தேவையான இடத்தில்
செந்தேக்கு போல
உறுதியாய் நிற்கவும்
பாலபாடம் கற்பித்த
பல்கலைக் கழகம்!!

புடம் போட்ட இடம் ,மனதை தயார்படுத்திய இடம்

அழகிய கருத்துடைய கவிதை தந்தமைக்கு நன்றி நண்பரே

சக்தி கல்வி மையம் said...

எனக்குத் தெரியாமல்
மட்கி புதையுண்டு
என்னுள்ளிருந்த இயைபுகளை
இன்னதென இனம்கண்டு
இது உனக்குத் தகுமென
இனிதே உரைத்திட்ட
இன்னுமொரு தாய் நீ!!// அசத்தல் வரிகள் சகோ..

சக்தி கல்வி மையம் said...

தாயின் கருவறையில்
நான் இருந்ததோ
பத்து மாதங்களே!
ஏழு ஆண்டுகள் எனை
மீண்டும் கருவைத்து
நயமாய் நல்லுருவாக்கி
நன்மைபடச் செய்ததால்
நீ எனக்கு என்றும்
இரண்டாம் கருவறையே!!// நிச்சயம் இரண்டாம் கருவறைதான் பள்ளிக் கூடம்..

குறையொன்றுமில்லை. said...

தாயின் கருவறையில்
நான் இருந்ததோ
பத்து மாதங்களே!
ஏழு ஆண்டுகள் எனை
மீண்டும் கருவைத்து
நயமாய் நல்லுருவாக்கி
நன்மைபடச் செய்ததால்
நீ எனக்கு என்றும்
இரண்டாம் கருவறையே


மிகவும் அழகான வரிகள்.

சாகம்பரி said...

ஒரு ஆசிரியராக இந்த கவிதை என்னை மகிழ்விக்கிறது நன்றி சகோ.

சென்னை பித்தன் said...

பள்ளி என்னும் இரண்டாம் கருவறை பற்றி அருமையான கவிதை.

ராஜா MVS said...

தாங்கள் தேர்ந்தெடுத்த தலைப்பே என் மனதை ஆர்ப்பரித்து விட்டது... நண்பரே...

கவிதை வரிகள் அனைத்தும் ரசித்து ருசித்தேன்...

பகிர்வுக்கு நன்றி... நண்பரே...

MANO நாஞ்சில் மனோ said...

எனக்குத் தெரியாமல்
மட்கி புதையுண்டு
என்னுள்ளிருந்த இயைபுகளை
இன்னதென இனம்கண்டு
இது உனக்குத் தகுமென
இனிதே உரைத்திட்ட
இன்னுமொரு தாய் நீ!!//

கலக்கிட்டீங்க மகேந்திரன் கலக்கிட்டீங்க....!!! ஆம் பள்ளிக்கூடம் நமக்கு எல்லாருக்கும் ஒரு தாயின் கருவறையே இது சத்தியமான வார்த்தை....!!!

முனைவர் இரா.குணசீலன் said...

தலைப்பைப் பார்த்தவுடனே இதுவாகத்தான் இருக்கும் என்று மதிப்பிட்டு வந்தேன் நண்பரே..

மதிப்புமிக்க தங்கள் பதிவினைக் கண்டு மகிழ்ந்தேன்..

அருமை..

முனைவர் இரா.குணசீலன் said...

அடைகாத்து பொறித்த
அடைக்கல ஆலயம்!!


அருமை..

Unknown said...

// தாயின் கருவறையில்
நான் இருந்ததோ
பத்து மாதங்களே!
ஏழு ஆண்டுகள் எனை
மீண்டும் கருவைத்து
நயமாய் நல்லுருவாக்கி
நன்மைபடச் செய்ததால்
நீ எனக்கு என்றும்
இரண்டாம் கருவறையே//

கற்ற பள்ளியை இரண்டாம்
கருவறை ஆக்கிய தங்கள் கவிதை
வளம் சாலச்சிறந்தது!

புலவர் சா இராமாநுசம்

மாய உலகம் said...

உண்மையில் இரண்டாம் கருவறை தான்... அருமையாக கவிதையில் அசத்திவிட்டீர்கள் அன்பரே! வாழ்த்துக்கள்.

காட்டான் said...

வணக்கம் மாப்பிள!
பள்ளிக்கூடத்தை இரண்டாம் கருவறையாக்கிய உங்கள் கவிதை அழகு..

எல்லோருக்கும் இருக்கும் உணர்வு உங்கள் கவிதையில்... பகிர்வுக்கு நன்றி!!

Yaathoramani.blogspot.com said...

தலைப்பும் பதிவும் மிக மிக அருமை
கல்விக் கூடத்தை இரண்டாம் தாயென
மிகச் சிறப்பான புதிய சிந்தனையை
கருவாகக் கொண்ட தங்கள் படைப்பு
அருமையிலும் அருமை
"தாயினும் சாலப் பரிந்து நீ .."
என்கிற சொற்றோடருக்கு விளக்கமாக
தங்கள் படைப்பு அமைந்திருந்தது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 10

Anonymous said...

நீ எனக்கு என்றும்
இரண்டாம் கருவறையே//

அழகான வரிகள்...

கற்ற பள்ளியை இரண்டாம்
கருவறை ஆக்கிய கவிதை...
அருமை...அருமை சகோதரரே...

கவிதை + புகைப்படங்கள் பழைய நினைவுகளை மீட்டிவிட்டன...

காரப்பேட்டை Vs St.Xavier's...

ஹேமா said...

அருமையான கற்பனை மகேந்திரன்.நான் ஒருபோதும் இப்படி நினைத்ததில்லை.வாழ்த்துகள் !

துரைடேனியல் said...

Nice Sago.
TM 11.

PUTHIYATHENRAL said...

நல்ல பதிவு வாழ்த்துக்கள்! தொடரட்டும் உங்கள் பணி! நிறைய வலைத்தளங்கள் சினிமாவை நம்பியே காலம் தள்ளும் வேளையில் சமூக சிந்தனை பதிப்புக்களை கொண்டிருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்களை, நன்றிகளை பதிய கடமை பட்டுள்ளேன். நன்றி தோழரே.

முனைவர் இரா.குணசீலன் said...

அன்பு நண்பரே..

மழலை உலகம் தொடர்பான
தங்கள் இடுகையை
எனது பதிவில் பகிர்ந்துள்ளேன்..

காணத் தங்களை அன்புடன் அழைக்கிறேன்..

RAMA RAVI (RAMVI) said...

//தேவையின் பொருட்டு
நாணல் போல வளையவும்
தேவையான இடத்தில்
செந்தேக்கு போல
உறுதியாய் நிற்கவும்
பாலபாடம் கற்பித்த
பல்கலைக் கழகம்!!//

அருமை.

தாயைப்போலவே நல்லது கெட்டது நமக்கு சொல்லிக்கொடுத்த பள்ளிக்கூடம் இரண்டாம் கருவரைதான்.

சாகம்பரி said...

குழந்தைகள் பற்றிய சிறப்புத் தொடர் ஒன்றை ஆரம்பித்துள்ளோம். இதில் குழந்தைகள் பற்றிய உங்கள் கருத்துக்களையும் பதிய தொடர் பதிவிற்குஅழைத்துள்ளேன. நேரமிருக்கும்போது தொடருங்கள். மிக்க நன்றி.
http://mahizhampoosaram.blogspot.com/2011/11/blog-post_16.html

சி.பி.செந்தில்குமார் said...

நன்று

வெங்கட் நாகராஜ் said...

இரண்டாம் கருவறை... என்ன ஒரு சிந்தனை...

வாழ்த்துகள்....

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஷைலஜா,
தங்களின் முதல் வருகைக்கும்
வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சண்முகவேல்,
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் எம்.ரமேஷ்,

சரியாச் சொன்னீங்க
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கருன்,
தங்களின் ஆழ்ந்த கருத்துரைக்கு
என் உளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை லக்ஷ்மி அம்மா,
தங்களின் ஆழ்ந்த கருத்துரைக்கு
என் உளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி சாகம்பரி..

தங்களின் கருத்து என்னை மகிழ்விக்கிறது


தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சென்னைப்பித்தன் ஐயா,
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ராஜா MVS,
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் மனோ,
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை முனைவரே,
தங்களின் ஆழ்ந்த கருத்துரைக்கு
என் உளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை புலவரே,
தங்களின் ஆழ்ந்த கருத்துரைக்கு
என் உளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ராஜேஷ்,
தங்களின் வாழ்த்துக்கும் ஆழ்ந்த கருத்துரைக்கும்
என் உளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை காட்டான் மாமா,
தங்களின் வாழ்த்துக்கும் ஆழ்ந்த கருத்துரைக்கும்
என் உளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ரமணி,


சரியாச் சொன்னீங்க

தங்களின் வாழ்த்துக்கும் ஆழ்ந்த கருத்துரைக்கும்
என் உளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு சகோதரர் ரேவேரி,
புனித சவேரியார் பள்ளியும் காரபேட்டை பள்ளியும்
நமக்கு இருவேறு அல்லவே,
நான் இன்னும் அந்த பள்ளிகளை ரசித்துக் கொண்டிருக்கிறேன் நேரில் கண்களால்...

தங்களின் வாழ்த்துக்கும் ஆழ்ந்த கருத்துரைக்கும்
என் உளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஹேமா,
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் துரைடேனியல்,

தங்களை வசந்தமண்டபம் சாமரம் வீசி வரவேற்கிறது,

தங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் புதியதென்றல் அவர்களே,
தாங்கள் என்மீது கொண்ட நம்பிக்கைக்கும்
மரியாதைக்கும் நான் என்றும் என்றென்றும்
கடமைப்பட்டவன்,
தங்களின் அன்புக்கும் இனிய கருத்துக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள் பல.

மகேந்திரன் said...

அன்புநிறை முனைவரே,

என்றும் எனக்கும் என் பதிவுகளுக்கும் ஆதரவு அளிக்கும்
தங்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
தங்களின் தொடர் ஆதரவு என்னை மேலும் பட்டை தீட்டுகிறது

நன்றி முனைவரே.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ராம்வி,
தங்களின் ஆழ்ந்த கருத்துரைக்கு
என் உளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி சாகம்பரி,
தங்களின் தொடர் பதிவைக் கண்டேன்.
நிச்சயம் தொடர்கிறேன் ..
மிக்க நன்றி சகோதரி.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சி.பி,
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் வெங்கட் நாகராஜ்,
தங்களின் வாழ்த்துக்கும் ஆழ்ந்த கருத்துரைக்கும்
என் உளம்கனிந்த நன்றிகள்.

Unknown said...

மாப்ள அருமை!

Learn said...

பாராட்டுக்கள்

தமிழ்த்தோட்டம் நடத்தும் இலக்கிய போட்டிக்கும் உங்களது பதிவுகளை அனுப்பி வைக்கலாமே

http://www.tamilthottam.in/t20084-2011

kupps said...

நம் வயதை ஒத்த அனைவருக்குமே தமது ஆசிரியர்களைப்பற்றிய மறக்கமுடியாத நினைவுகள் நிறையவே இருக்கும்.ஏனெனில் அந்த காலத்திய ஆசான்கள் அவ்வளவு கடமையுணர்வு மற்றும் தியாக உணர்வு உள்ளர்வகளாக இருந்தனர்.ஆனால் தற்போதைய நிலைமையைப்பற்றி நம் அனைவருக்குமே தெரியும்.இதற்கு யார் காரணம்?ஆசிரியர்கள் மட்டும் தானா ????????????

தங்கள் கவிதை நமது நல்லாசிரியர்களை நினைவூட்டும் அருமையான வரிகள்.நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
வாழ்த்துகள்.

ராஜி said...

பசுமை நிறந்த நினைவுகளை மீட்டெடுத்து விட்டீர்கள் சகோ

அன்புடன் மலிக்கா said...

நயமாய் நல்லுருவாக்கி
நன்மைபடச் செய்ததால்
நீ எனக்கு என்றும்
இரண்டாம் கருவறையே!!//

நயம்பட சொல்லியுள்ளீர்கள் சகோ வாழ்த்துகள்..

கீதமஞ்சரி said...

அழகான கவிமாலை சாத்தி இரண்டாம் கருவறையில் ஏந்தியவளைப் பெருமைப்படுத்தியுள்ளீர்கள். மனம் மகிழ்ச்சியாலும் நெகிழ்ச்சியாலும் நிறைந்து இனிக்கிறது. பாராட்டுகள் மகேந்திரன்.

நம்பிக்கைபாண்டியன் said...

நாம் படித்த பள்ளிக்கூடங்கள் என்றும் நினைவில் நீங்காத பசுமையான நினைவுகள்! பள்ளியை கவிதையால் பெருமைபடுத்திவிட்டீர்கள்!

அம்பாளடியாள் said...

தேவையின் பொருட்டு
நாணல் போல வளையவும்
தேவையான இடத்தில்
செந்தேக்கு போல
உறுதியாய் நிற்கவும்
பாலபாடம் கற்பித்த
பல்கலைக் கழகம்!!

வெங்கொடிய செந்நாகம்
விடமேறிய நாவைப்போல்
தீயவைகள் நெஞ்சில்
தலைதூக்க எத்தனிக்கையில்
தலையில் கொட்டி - அதை
முளையில் வேரறுத்த
முத்தமிழ் மன்றம்!!

மிக அழகாக நீதிசொல்லும் வரிகள்
அருமை!..வாழ்த்துக்கள் சகோ மிக்க நன்றி பகிர்வுக்கு .முடிந்தால் அவசியம் வாருங்கள் என் தளத்திலும் ஓர் நீதி பகர .கவிதை காத்திருக்கின்றது

மகேந்திரன் said...

அன்புநிறை விக்கி மாம்ஸ்,,
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை தமிழ்த்தோட்டம் நிர்வாகி அவர்களை வருக வருக என
வசந்தமண்டபம் சாமரம் வீசி வரவேற்கிறது.
நிச்சயம் பங்கு கொள்கிறேன் நண்பரே.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் குப்புசாமி,
சரியான கேள்விக்கணை தொடுத்திருக்கிறீர்கள்..
விடை இங்கே பட்டபத்திரம்..
பிஞ்சு நெஞ்சில் நன்சுவிதை விதைப்பதில் முதல்
குற்றச் சாட்டு பெற்றவர்களையே சாரும்..
அடுத்து பள்ளிப்பருவம் தொடர்கையில் அங்கே ஆசிரியர்கள்
முக்கியப்பங்கு வகிக்கிறார்கள் என்பது என் தாழ்மையான கருத்து..
ஆனால் அவர்கள் மட்டும்தானா என்று கேட்டால் இல்லையென்றே பதில் சொல்ல முடியும்..
சமுதாயம் அதைவிட முக்கிய பங்கு வகிக்கிறது என்பது
நிதர்சனமான உண்மை..
தங்களின் மேன்மையான கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை ரத்னவேல் ஐயா
தங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான கருத்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ராஜி
தங்களை வசந்தமண்டபம் சாமரம் வீசி வரவேற்கிறது.
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
உள்ளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி மலிக்கா,
தங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான கருத்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி கீதா.,
தங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான கருத்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் நம்பிக்கைபாண்டியன்.,
தங்களின் ஆழ்ந்த கருத்துரைக்கு
என் உளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி அம்பாளடியாள்.,
தங்களின் ஆழ்ந்த கருத்துரைக்கு
என் உளம்கனிந்த நன்றிகள்.

சசிகலா said...

தாயின் கருவறையில்
நான் இருந்ததோ
பத்து மாதங்களே!
ஏழு ஆண்டுகள் எனை
மீண்டும் கருவைத்து
நயமாய் நல்லுருவாக்கி
நன்மைபடச் செய்ததால்
நீ எனக்கு என்றும்
இரண்டாம் கருவறையே!!
அருமை அண்ணா.

Post a Comment