Powered By Blogger

Monday 26 August 2013

பொய்கள் மெய்த்த பொழுது!!!







னிப்பாறை மேல் பதிந்த  
வெற்று உள்ளங்கை போல 
சில்லிட்டு உதிரம் 
உறைந்தே போன தருணமது!!


ங்கியடித்த சுத்தியல் 
சிற்றங்குலம் இடம் மாறி 
பெருவிரலை பதம்பார்த்தது போல் 
சுருண்டுபோன தருணமது!!




பெருந்திரள் மக்கள் கூடும்
சபையின் நடுவினிலே
உடையற்றுப் போன
நிர்வாணத் தருணமது!!


நிகழ்நிலை தவறி 
சுயம் மறந்துபோனவன் 
மீள்நிலை திரும்பி - மீண்டும் 
மனம் கருகிப்போன தருணமது!!



குப்பையில் தவழ்ந்து 
விண்ணேற்றம் கண்டபின் 
கோபுர நிலை தடுமாறி - பாழும் 
கிணற்றில் வீழ்ந்த தருணமது!!


பொய்ச்சிறகை விரித்து 
பெருவானம் வியாபித்து 
சிறகொடிந்து போனதும் 
விறகொடித்த மரமானதேன்?!!
ம்பிக்கை எனும் தேனில் 
நஞ்சூற்றி குடித்துக் களித்து 
நீலம் பரவிடுகையில் 
நீச்சம் வீழ்ந்தது ஏன்?!!


நிதர்சனம் எனும் அழகு 
நித்திலமாய் இருக்கையில் 
பொய்யரிதாரம் பூண்டதேனோ 
செய்யாப் புகழுக்காக!!
மாற்றான் ஒருவன் 
இவனுக்கில்லை ஈடென 
வேற்றோன் மெச்சுவதற்காய் 
பொய்வேடம் தரித்ததேனோ !!


பொய்யன் இவனென
பொய்கள் சாயமிழந்த பொழுது
முன்னிலை நிற்போரை
நோக்குதல் கூச்சமன்றோ?!!
ன்னிலை தவறி
உண்மைகளை மறைத்து
பொய் பூக்களுக்கு நீரூற்றுவதால்
வீசும் மணத்திற்கு வாசமுண்டோ?!!

ற்ற உணமைகளை
நிற்கதியாய் விட்டு
பொய்யுரைக்கும் பொழுதுகள்
தற்கொலைக்குச் சமமாம்!!!!



அன்பன்
மகேந்திரன் 



Monday 19 August 2013

திணை மயக்கம்!!!







ற்றுப் பார்த்தால் 
மாற்றுப் பண்புகள்!
சற்றும் வழுவாது - வாழ்வில் 
ஏற்றம் கண்டிட 
வற்றிப்போன உணர்வுகளை 
முற்றம் கடத்திவிடு 
கொற்றம் ஏகிட!!!


விலையில்லா மகிழ்வினை 
மலை ஏற்றிவிட்டு
தலைகீழாய் தொங்குவதேன்?!
நிலையதனை மறந்து - மோக 
வலைக்குள் சிக்கி 
மூலையில் முடங்கி 
சிலையாகிப் போவதேன்?!!!
 

 


ச்சமெனும் அறிவீனம் 
எச்சமாக இருந்திடில் 
துச்சமாக எண்ணிடு!
பிச்சை புகுந்திடினும் - ஆங்கே  
இச்சகத்தில் உனக்கான 
மிச்சமிடம் உண்டென 
மாச்சல் அகற்றிடு!!!


ல்லென இருப்பினும் 
புல்லென சிலிர்ப்பினும்
கால் ஊன்றி நடந்திட - அழகாய் 
கோல் இங்கு ஆயிரம்!
இல்லையென்று ஒன்றில்லை
எல்லை தீண்டும் முன் 
செல்லரித்துப் போகாதே!!!
 
 
நிற்குமிடம் எதுவெனினும் 
ஏற்கப் பழகிடு!
கற்குடம் கனிந்திங்கே 
பொற்குடமாய் கைதவழும்!
மற்போர் தனைவிடுத்து - இனிதாய் 
சொற்போரில் சாய்த்துவிடு 
கற்றோரும் கைதொழுவர்!!!


வினைக்கும் எதிருண்டு 
முனைத்திடு வாழ்வினிலே!
நினைத்த இடம் இல்லையேல் 
சுனைத்த இடம் வசமாக்கு!
பனைத்த செங்கழனியாய் - வளம் 
சினைத்து பெருகிட  
திணை மயக்கம் தவிர்த்திடு!!!

 

அன்பன் 
மகேந்திரன்